Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு

பிரதான கடமைகள்

ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள நிறுவன முறைமையூடாக நகரத்தில் இருந்து கிராமிய மற்றும் மாகாணத்தின் கஷ்டப் பிரதேசங்கள் வரை சுகாதார சேவைகளை விரிவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஊவா மாகாண வாசிகளுக்கு கீழே குறிப்பிடப்பட்ட சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

பொதுச் சுகாதார சேவைகள்

  1. பரவுகின்ற மற்றும் பரவிச் செல்லாத நோய்களின் பரம்பலைத் தடுத்தல்.
  2. தாய்-சேய் சுகாதார சேவைகளை அமுலாக்குதல்.
  3. கஷ்டப் பிரதேசக் கிராமங்களுக்கு சுகாதார சேவைகளை கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான  'சுவசரண / சுவ நவோதய' நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்.
  4. அரச ஊழியர்களின் சுகாதார மேம்பாட்டுக்காக ஊவா 'சுவதிலின' நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்.
  5. நோயாளிகளுக்கான பணிவிடை சேவைகளை விரிவாக்கல்.
  6. வைத்தியசாலையையும் பாடசாலையையும் ஒருங்கிணைத்து 'சுவசிரம' முகாம்களை நடத்துதல்.
  7. வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதன் ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்ற நோயாளிகளின் சேவைகளைப் பெறுவதற்கான காத்திருக்கைக் காலத்தைக் குறைத்தல்.
  8. துப்பரவேற்பாடு வேலைத்திட்டங்களை அமுலாக்குதல்.


ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களம்

  1. உள்நாட்டு ஆயுர்வேத  முறைக்கு முதலிடம் வழங்கி உள்நாட்டு ஆயுர்வேத முறைகளைப் பேணி சுதேச மருத்துவ முறைக்கு அவசியமான சேவைகளை வழங்கக்கூடியவகையில் ஊவா மாகாண சபையின் அனைத்துச் சுகாதார அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
  2. ஊவா சுவசரண நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தல்.
  3. சனசமூக சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்களினூடாக தாய்-சேய் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
  4. சுதேச ஆயுர்வேத திட்டத்தைப் பேணும் பொருட்டு மூலிகைத் தோட்டங்களை நிறுவுதல், பஞ்சகர்ம சிகிச்சைக் கூறுகளை வரையறுத்தல்.
  5. பாரம்பரிய 'வெதகெதர' எண்ணக்கருவினை நிறுவுதல்.
     

ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கு அவசியமான ஒளடதங்களை ஊவா மாகாணத்திலிருந்தே உற்பத்தி செய்யவும் கொள்வனவு செய்வதற்காக, மாகாணத்திற்கு வெளியில் நாடிச்செல்வதைத் தடுத்து அப்பணத்தை மாகாணத்திற்கு உள்ளேயே தேக்கி வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதன் பொருட்டு மிரிஸ்வத்த மருந்து உற்பத்தியகம் 120 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதோடு,  03 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய இயந்திர சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு உற்பத்திச் செயற்பாடுகளைத் தொடங்கும் தறுவாயில் உள்ளது.

மேலும் சுதேச மருந்து வகைகளை மாகாணத்திலிருந்தே பெற்று அதற்காக செலவாகின்ற பணத்தை மாகாணத்திற்குள்ளேயே தேக்கி வைக்கும் பொருட்டு மாகாணத்திலுள்ள அனைத்து மூலிகைத் தோட்டங்களையும் அபிவிருத்தி செய்யவும் பாடசாலை மட்டத்தில் மூலிகைத் தோட்டங்களை உருவாக்கவும் பாடசாலைகளுக்கு அவசியமான உபகரணங்களை வழங்கி பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாவல் திணைக்களம்

  1. ஊவா மாகாண சிறுவர்கள் சம்பந்தமான சேவைகளை வழங்கி வருவதோடு இதன் பொருட்டு நன்னடத்தை திணைக்களத்தின் நிறுவன முறைமை இயங்கி வருகின்றது.
  2. தடுப்பு நிலையங்களிலுள்ள பிள்ளைகளைப் பாதுகாத்தல்.
  3. தெருக் குழந்தைகளைப் பாதுகாத்தல்.
  4. முன்பள்ளிகள் சம்பந்தமாக செயலாற்றுதல்.


மகளிர் விவகாரங்கள் பிரிவு

'ஊக்கமுள்ள பெண்ணுக்கு - சக்தியும் அதிகாரமும்' எனும் நோக்கிற்கு அமைவாக பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியால் உருவாக்கப்பட்ட நிகழ்கால சமூகத்திற்கு அவசியமாகின்ற வகையில் சமூகத்துடன் அமைந்தொழுகுகின்ற மற்றும் திறமைகள் நிறைந்த மகளிர் தலைமுறையினரைக் கட்டியெழுப்புவதைப் பணியாகக் கொண்டு ஊவா மாகாணத்தில் பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக கீழே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  1. ஊவா மாகாண பெண்களுக்காக சுயதொழில் பிறப்பாக்கத்திற்கான கருத்திட்டங்களை அமுலாக்குதலும் சுகாதாரக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதளும்.
  2. குறைந்த வருமானம் பெறுகின்ற விதவைக் குடும்பங்களை ஊக்குவிப்பதற்கான கருத்திட்டங்களை உருவாக்கல்.

 

 
 
 
செப்டம்பர் 2019
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5